திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 19 ஜூன் 2024 (14:32 IST)

ஆந்திரா துணை முதல்வராக பொறுப்பேற்றார் பவன் கல்யாண்..!!

Pavan Kalayan
ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண்,  கோப்புகளில் கையெழுத்திட்டு ஆந்திர மாநில துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
 
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலோடு ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது.  ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்,  ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி படுதோல்வி சந்தித்தது.  சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. 
 
175 தொகுதிகள் கொண்ட ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான ஜன சேனா கட்சி 21 இடங்களிலும், பா.ஜ.க 8 இடங்களிலும்  வெற்றி பெற்றது.  இதைத்தொடர்ந்து சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக கடந்த 12ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். 

ஜன சேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் துணை முதல்வராகவும், பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊரக நீர் வழங்கல் சுற்றுச்சூழல், காடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

 
இந்த நிலையில், ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் இன்று ஆந்திராவில் உள்ள துணை முதலமைச்சர் அலுவலகத்திற்கு சென்று கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணியை தொடங்கினார்.