செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 26 நவம்பர் 2022 (15:24 IST)

டீசல் தீர்ந்து நடுவழியில் நின்ற ஆம்புலன்ஸ்; நோயாளி பலி!

ராஜஸ்தான் மாநிலத்தில் நோயாளியை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் நடுவழியில் நின்றதால் நோயாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள தனப்பூர் பகுதியை சேர்ந்தவர் தேஜ்யா. இவர் நேற்று திடீரென அவரது வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். இதனால் உடனடியாக தனியார் ஆம்புலன்ஸை வரவழைத்து அதில் தேஜ்யாவை கொண்டு சென்றுள்ளனர்.

செல்லும் வழியில் திடீரென ஆம்புலன்ஸ் டீசல் இல்லாமல் நின்றுள்ளது. இதனால் செய்வதறியாது திகைத்த உறவினர்கள் ஆம்புலன்ஸ் வண்டியை தள்ளியபடி மருத்துவமனை கொண்டு செல்ல முயன்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்ல காலதாமதமானதால் தேஜ்யா ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்துள்ளார்.

ஆம்புலன்ஸ் நடுவழியில் நின்றதே தேஜ்யா உயிரிழக்க காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.