இந்திய விமானப் படை தாக்குதல் நடத்திய பாலகோட்டில் மீண்டும் பயங்கரவாதிகள் !
கடந்த பிப்ரவரி மாதத்தில் காஷ்மீரில் உள்ள புல்வாமா என்ற பகுதியில் இந்திய ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இதனையடுத்து இந்திய விமானப்படையினர், பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில் சமீபத்தில் காஷ்மீருக்கு இருந்து வந்த 370 சிறப்பு அந்தஸ்து மற்றும் 35 ஏ ஆகிய பிரிவுகளை மோடி அரசு நீக்கி உத்தரவிட்டது. இதனால் பாகிஸ்தான் அரசு கோபம் கொண்டுள்ளது. பல்வேறு உலகநாடுகளுக்கு பாகிஸ்தாம் பிரதமர் கோரிக்கை விடுத்தும் அவரது பேச்சை யாரும் பொருட்படுத்தவில்லை. ஆனால் பிரதமர் மோடியில் கை உலக அரங்கில் ஓங்கியுள்ளது.
இந்நிலையில், நம் விமானப்படை தாக்குதல் நடத்தி அழித்த, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ் - இ - முஹம்மது என்ற பயிற்சி மையத்தில்,தீவிரவாதிகள் சுமார் 50 பேர் வரை தீவிரவாத பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகின்றன.
பாகிஸ்தானில் தூண்டுகோளில் பேரில் இந்த பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவின் காஷ்மீர் பகுதிக்குள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகின்றன.