திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 17 ஜூன் 2020 (11:03 IST)

கேட்பார் அற்று போனதா இந்தியா? சீனாவை தொடர்ந்து பாக். தாக்குதல்!

சீனாவின் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியகியுள்ளது. 

 
லடாக் எல்லையில் இந்திய சீன படைகள் இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்களும் 43 சீன வீரர்களும் உயிரிழந்ததாக வெளியான தகவல் இரு நாடுகளை மட்டுமின்றி உலக நாடுகளையே பதட்டத்தில் ஏற்பட்டுள்ளது. 
 
இந்திய சீன நாடுகளுக்கு இடையே போர் மூண்டால் அது உலக போராக மாறும் அபாயம் இருப்பதால் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகிறது. 
 
20 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ள நிலையில் மேலும் 4 வீரர்கள் கவலைகிடம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பிரச்சனைக்கே இன்னும் தீர்வு கிடைக்காத நிலையில் பாகிஸ்தான் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. 
 
ஆம், ஜம்மு - காஷ்மீர் நவ்காம் பகுதியில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. ஆயுதங்களை கொண்டு தாக்கிய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
இருப்பினும் இந்தியா அடுத்தடுத்த தாக்குதலுக்கு உள்ளாவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.