பரவால்ல ஏழைகளின் நியாபகம் இருக்கு - ப.சி. சீண்டல்!
2022-23 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட் தொடர்பாக ப.சிதம்பரம் பேட்டியளித்தார்.
2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று நாடாளுமன்ற கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் அறிவிக்கப்பட்டது. பல்வேறு துறை சார்ந்த நிதி ஒதுக்கீடு அறிவிப்புகள், புதிய திட்டங்கள், கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் 2022-23 ஆம் ஆண்டு பட்ஜெட் தொடர்பாக ப.சிதம்பரம் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது, சிறு,குறு நடுத்தர தொழில்களை மீட்டெடுக்கும் வகையில் எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. ஜி.எஸ்.டி., வருமான வரி சலுகைகள் இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் அதிகரித்து வரும் ஊட்டச்சத்து குறைபாட்டை சரி செய்வதற்கான எந்த திட்டமும் வகுக்கப்படவில்லை என்றும் ஏழைகள் என்ற வார்த்தை பட்ஜெட்டில் 2 முறை இடம்பெற்றுள்ளது; ஏழைகளை மறக்காமல் இருந்ததற்கு நன்றி என ப. சிதம்பரம் தெரிவித்தார்.