வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 7 ஜூலை 2018 (13:31 IST)

ரயில் பயணம் செய்ய ஒரிஜினல் அடையாள அட்டை தேவையில்லை...

இனிமேல் பயணிகள் ரயிலில் பயணம் செய்யும் போது, ஒரிஜினல் அடையாள அட்டை எடுத்து செல்ல தேவையில்லை என மத்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

 
ஆன்லைனில் டிக்கெட்  முன்பதிவு செய்யும் பயணிகள் இதுவரை ஆதார், ஓட்டுனர் உரிமை அட்டை போன்ற ஏதேனும் ஒரு அடையாள அட்டையை டிக்கெட் பரிசோதகரிடம் காட்ட வேண்டும் என்பது நடைமுறையில் இருந்தது. தற்போது அது தேவையில்லை என்கிற நிலை உருவாகியுள்ளது.
 
அதாவது. மத்திய அரசின் டிஜி லாக்கர் என்கிற மொபைல் ஆப்பை பதிவிறக்கம் செய்து அதில் ஆதார் கார்டு மற்றும் ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை சேமித்து வைத்துக்கொள்ளலாம். டிக்கெட் பரிசோதகரிடம் இந்த டிஜிட்டல் ஆவணங்களை காட்டினாலே போதுமானது. ஒரிஜினல் ஆதார் அட்டை அல்லது மற்ற அடையள அட்டை எதையும் காட்ட தேவையில்லை என மத்திய ரயில்வே நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
 
ஆனால், ஸ்மார்ட்போன் பயனபடுத்தாத பயணிகள், அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.