கும்பமேளாவில் உயிரிழந்தவர்கள் குறித்து பிரதமர் மோடி பேசாதது ஏன்? ராகுல் காந்தி கேள்வி..!
மகா கும்பமேளாவில் உயிரிழந்தவர்களை பற்றி பிரதமர் மோடி ஏன் பேசவில்லை என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளா விழாவின் வெற்றி குறித்து, இன்று மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, "நாட்டின் ஒற்றுமையே நமக்கு வலிமை அளிக்கிறது. இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க நினைத்த சக்திகள் அதனால் உலுக்கியுள்ளன. மகா கும்பமேளா நிகழ்ச்சியின் பிரம்மாண்டத்தை கொண்டு, உலகமே இந்தியாவின் அடையாளத்தை வியப்புடன் பார்த்தது," என்று பிரதமர் கூறினார்.
பிரதமரின் பேச்சுக்கு பின் ராகுல் காந்தி பேசியபோது, "கும்பமேளா நம் பண்பாடு மற்றும் வரலாற்றின் முக்கிய பகுதியாகும் என்பதை பிரதமர் கூறியது நாங்கள் ஏற்கிறோம். ஆனால், இதில் உயிரிழந்தவர்களை பற்றி பிரதமர் எந்தக் கவலையும் வெளிப்படுத்தவில்லை. இதுவே எங்களின் முக்கியமான குற்றச்சாட்டு.
கும்பமேளாவில் பங்கேற்ற பல இளைஞர்கள் பிரதமரிடம் வேறு ஒரு எதிர்பார்ப்பும் வைத்திருந்தனர். அது வேலைவாய்ப்பு. மக்களவையில் இது குறித்து அனைவருக்கும் பேச வாய்ப்பு தர வேண்டும். ஆனால், எங்களுக்கு உரையாற்ற அனுமதி மறுக்கப்படுகிறது. இதுவே புதிய இந்தியா!" என்று தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran