கர்நாடகாவில் ’ஆபரேஷன் கமலா’ செயல்படுத்தப்படுமா? வானதி சீனிவாசன் பதில்..!
கர்நாடக மாநிலத்தில் ஆபரேஷன் கமலா என்ற திட்டம் செயல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பதில் அளித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் ஆன பின்னரும் இன்னும் முதலமைச்சர் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கட்சி அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் சித்தராமையா மற்றும் டி கே சிவகுமார் இருவரில் யார் முதலமைச்சர் ஆனாலும் இன்னொருவர் அதிருப்தியாக இருப்பார் என்றும் அந்த அதிருப்தியாளரை பாஜக தன்வசம் இழுத்து ஆட்சி அமைக்க முயற்சிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஆபரேஷன் கமலா என்ற திட்டம் தொடங்கிவிட்டதாகவும் சிலர் கூறி வருகின்றனர்.
இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் நாங்கள் எந்த கட்சியையும் பிளவுபடுத்த மாட்டோம் என்றும் அவர்களாகவே வந்து ஆதரவு கேட்டால் அதன் பிறகு அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுப்போம் என்றும் ஆபரேஷன் கமலா என்ற எந்த திட்டமும் இப்போதைக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
Edited by Mahendran