Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்தில் 1 ரூபாய் சில்லறை தராத வழக்கு.. ரூ.3000 நஷ்ட ஈடு அறிவித்து உத்தரவிட்ட நீதிமன்றம்..!

Written By Mahendran
Updated: புதன், 22 பிப்ரவரி 2023 (15:01 IST)
பேருந்தில் ஒரு ரூபாய் சில்லறை தரவில்லை என்று பதிவு செய்யப்பட்ட வழக்கில் 3000 ரூபாய் நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
பெங்களூரைச் சேர்ந்த ஒருவர் பெங்களூர் மாநகர போக்குவரத்து கழகம் மீது தான் பயணம் செய்த பேருந்தின் கண்டக்டர் ஒரு ரூபாய் சில்லறை தரவில்லை என வழக்கு தொடர்ந்தார். 
 
கடந்த 2019 ஆம் ஆண்டில் தான் பேருந்தில் பயணித்த போது சில்லறை  தராமல் தராத கண்டக்டர் தன்னை கடிந்து கொண்டதாகவும் இதனால் தனக்கு நஷ்ட ஈடாக 15 ரூபாய் 15 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்றும் தனது மனுவில் தெரிவித்து இருந்தார். 
 
இந்த வழக்கு மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் பாதிக்கப்பட்டவருக்கு ரூபாய் 3000 அளிக்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூபாய் 1 சில்லறை தரவில்லை என்று பதிவு செய்யப்பட்ட வழக்கில் ரூ.3000 நஷ்ட ஈடு என தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

பெண்ணை துண்டாக்கி பிரியாணி சமைத்த கொடுமை!.. கொடூர கொலைகார ஜோடியை தேடும் போலீசார்!...

அண்ணா அறிவாலயத்தில் திமுக செயற்குழு கூட்டம்!.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?..

கைதியுடன் வீடியோ கால்!.. ஆடையை கழட்டும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்!..

அமெரிக்கா பொருளாதார தடை விதித்தால்!... ஈரான் கடும் எச்சரிக்கை!...

தமிழக எம்.எல்.ஏக்களிடம் எத்தனை பேரிடம் கார் இல்லை.. கட்சிவாரியான தகவல் இதோ...

அடுத்த கட்டுரையில்
Show comments