Daily Horoscope
✕

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. மன்னிச்சிக்கோங்க..! – மக்களிடம் ஓலா நிறுவனம் மன்னிப்பு

Written By Prasanth Karthick
Updated: வியாழன், 9 செப்டம்பர் 2021 (08:45 IST)
பிரபல ஓலா கால் டாக்ஸி நிறுவனம் ஸ்கூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

இந்தியாவில் பிரபலமாக இருந்து வரும் ஆன்லைக் கால் டாக்ஸி நிறுவனம் ஓலா. இந்த நிறுவனம் சமீபத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க போவதாக அறிவித்து முன்பதிவுகளை தொடங்கியது. பலரும் முன்பதிவு செய்திருந்த நிலையில் சமீபத்தில் தாங்கள் தயாரித்து வரும் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் மாடல்களையும் வெளியிட்டது ஓலா.

இந்த அறிவிப்பின்போது செப்டம்பர் 8ம் தேதி முதல் எலெக்ட்ரிக் பேட்டரி ஸ்கூட்டர் விற்பனை தொடங்கும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் நேற்று இந்த விற்பனை தொடங்கப்படவில்லை. இதுகுறித்து பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் மன்னிப்பு கேட்டு விளக்கம் அளித்துள்ள ஓலா நிறுவனம் சில காரணங்களால் 8ம் தேதி விற்பனையை தொடங்க முடியவில்லை என்றும், கண்டிப்பாக செப்டம்பர் 15 அன்று விற்பனை தொடங்கும் என்றும், காலதாமதத்திற்கு மன்னிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

எல்லாம் காட்டு

விலை உயர்ந்த வாட்ச்சுடன் வந்த நபர்.. டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு!...

உலக அளவில் 2070-ல் முஸ்லிம் மக்கள் தொகை முதலிடத்தில் இருக்கும்.. புதிய ஆய்வில் தகவல்...

இந்திய தேர்தல் ஆணையத்தை அமெரிக்க பல்கலையில் குறை கூறிய ராகுல் காந்தி.. பரபரப்பு குற்றச்சாட்டு

சபரிமலையில் 24 மணி நேர அஞ்சல் சேவை.. பிரசாதம் பார்சல் சேவை தொடக்கம்...

ஆதி திராவிடர் மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப்.. புது விதி அமல்.. ! மாணவர்கள் உடனே என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments