புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 26 நவம்பர் 2019 (18:22 IST)

மகாராஷ்டிரா: 8 மணிக்கு சட்டப்பேரவை, எம்எல்ஏக்களுக்கு பதவிப்பிரமாணம்!

மகாராஷ்டிர சட்டப்பேரவையின் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்எல்ஏவான காளிதாஸ் கொலம்ப்கர் ஆளுநர் முன்னிலையில் பதவியேற்றார்.
 
மஹாராஷ்டிராவில் நிலவிவந்த அரசியல் குழப்ப சூழலில் திடீர் திருப்பமாக பாஜகவின் தேவேந்திர ஃபட்நாவிஸ் முதல்வராகவும் , தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். 
 
இதனை தொடர்ந்து பாஜகவின் வெற்றிக்கு எதிராக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆளுநர் தனது பதவியை தவறுதலாக பயன்படுத்துகிறார் என வழக்கு தொடுத்தனர். நீதிமன்றம் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டது.  
 
இந்நிலையில் அஜித் பவார் தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து தேவேந்திர ஃபட்நாவிஸும் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்காது. 
 
இதனைத்தொடர்ந்து மகாராஷ்டிர சட்டப்பேரவையின் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்எல்ஏவான காளிதாஸ் கொலம்ப்கர் ஆளுநர் முன்னிலையில் பதவியேற்றார். அதோடு மகாராஷ்டிர சட்டப்பேரவைக் கூட்டம் நாளை காலை 8 மணிக்கு கூட ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
அப்போது எம்எல்ஏக்களுக்கு நாளை காலை பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார் இடைக்கால சபாநாயகர் காளிதாஸ் கொலம்ப்கர்.