வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 19 மே 2019 (08:50 IST)

பாஜக ஆட்சிக்கு ஆதரவு வாபஸ்! மணிப்பூரில் ஆட்சி கவிழுமா?

மணிப்பூரில் பாஜக ஆட்சிக்கு ஆதரவு அளித்து வந்த என்.பி.எப் என்னும் நாகலாந்து மக்கள் முன்னணி திடீரென பாஜக ஆட்சிக்கு தனது ஆதரவை வாபஸ்  பெற்றுள்ளதால் அந்த மாநிலத்தில் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
மணிப்பூர் தலைநகர் கோஹிமாவில் உள்ள நாகலாந்து மக்கள் முன்னணி கட்சி அலுவலகத்தில் சற்றுமுன் நடந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் பாஜக அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற நாகலாந்து மக்கள் முன்னணி கட்சியின் தலைவர்கள் அதிரடியாக முடிவெடுத்துள்ளனர். இன்னும் இரண்டு நாட்களில் மக்களவை தேர்தல் வாக்குகள் எண்ணப்படும் நிலையில் நாகலாந்து மக்கள் முன்னணி கட்சி இப்படி ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளிலும், பாஜக 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ஆனால் நாகலாந்து மக்கள் முன்னணியின் 4 எம்.எல்.ஏக்கள், தேசிய மக்கள் கட்சியின் 4 எம்.எல்.ஏக்கள், லோக் ஜனசக்தி கட்சியின் ஒரு எம்.எல்.ஏ மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ ஒருவர் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது. பாஜகவின் பிரன்சிங் அம்மாநிலத்தில் முதல்வராக உள்ளார். 
 
தற்போது நாகலாந்து மக்கள் முன்னணி தனது 4 எம்.எல்.ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டதால் 27 எம்.எல்.ஏக்கள் மட்டுமே அரசுக்கு ஆதரவாக உள்ளனர். மணிப்பூரில் ஆட்சி அமைக்க 31 எம்.எல்.ஏக்கள் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது