போராடும் விவசாயிகளிடம் ரூ.50 லட்சம் கேட்டு நோட்டீஸ் !
டெல்லியில் தொடர்ந்து 23 வது நாளாக மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற விவசாயிகளிடம் ரூ.50 லட்சம் லட்சம் கேட்டு உத்தரபிரதேச அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லி சலோ என்ற பெயரில் தொடர்ந்து 23 வது நாளாக டெல்லியில் உள்ள முக்கிய சாலையை மறித்து உத்தரபிரதேசம்,பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்ட பாரதிய கிசான் யூனியன் விவசாயிகள் டெல்லியில் போராட்டும் விவசாயிகளுக்கு ஆதரவாக, இந்த அமைப்பின் தலைவர் ராஜ்பால்யாதவ், உழவர் தலைவர்கள், பிரம்மசாரி யாத,சதேந்திர யாதவ், ரவுடாஸ் ஜெய்வீர் சிங் போன்றோர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் இவர்கள் ஆறு பேருக்கு சம்பல் மாவட்ட நிர்வாகம் போராட்டத்தில் ஈடுபடுவதாகக் கூறி ரூ. 50 லட்சம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் விவசாயிகள் இந்தத்தொகையைச் செலுத்த மாட்டோம் தொடர்ந்து போராடுவோம் எனத் தெரிவித்துள்ளர்.
உபி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.