செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 17 நவம்பர் 2023 (14:21 IST)

இனிமேல் வெயிட்டிங் லிஸ்ட் கிடையாது: முன்பதிவு செய்யும் அனைவருக்கும் ரயில் வசதி..!

வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கும் அனைவரும் பயணம் செய்யும் வகையில் சிறப்பு ரயில் விடப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. 
 
வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுக்களை விலை உறுதி செய்யும் வகையில் அதிகமான ரயில்கள் இயக்கப்படும் என்றும் அடுத்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் 3000 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள்  இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.  
 
வரும் 2027- 28 ஆம் ஆண்டுகளில் வெயிட்டிங் லிஸ்ட் என்பதே இருக்காது என்றும் முன்பதிவு செய்யும் அனைத்து பயணிகளுக்கும் பயணம் செய்வதற்கான டிக்கெட் உறுதி செய்யப்படும் நிலை ஏற்படும் என்றும் ரயில்வே நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்  
 
தற்போது ஆண்டுக்கு 800 கோடி பேர் ஆண்டுக்கு ரயிலில் பயணம் செய்து வருவதாகவும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இது ஆயிரம் கோடியாக மாறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். 
 
அடுத்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் 3000 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் விடப்படும் என்றும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
 
Edited by Mahendran