புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (12:06 IST)

ரயில் ஏ சி வகுப்புகளில் இனி போர்வை கிடையாது – அதிரடி அறிவிப்பு!

இந்தியன் ரயில்வேயில் கொரோனாவுக்கு பிறகு தொடங்கப்பட இருக்கும் ரயில்சேவையில் சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

கொரோனாவால் 5 மாதங்களுக்கும் மேலாக ரயில்வே போக்குவரத்து தடை பட்டுள்ளது. இன்னமும் எப்போது ரயில்வே போக்குவரத்து தொடங்கும் என்பதும் தெளிவாக தெரியவில்லை. ஆனால் இப்போது ரயில்வே நிர்வாகம் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதன்படி ‘இனி ரயில்களில் ஏசி வகுப்புகளில் போர்வை, துண்டு மற்றும் கைக்குட்டைகள் போன்றவை வழங்கப்படாது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கு பதிலாக ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பொருட்களை விற்பனை செய்வதற்கு தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.