கர்நாடகாவால் ஊரடங்கிற்கு நோ சொன்ன எடியூரப்பா !
கர்நாடகத்தில் எக்காரணத்தை கொண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படாது அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே மிக அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் மாநிலமான மகாராஷ்டிராவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை அம்மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தை அடுத்து கர்நாடகாவிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த மாநில அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதனிடையே அம்மாநில முதல்வர் எடியூரப்பா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், பெங்களூரு உள்பட மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தி உள்ளேன். நிபுணர்கள் கூறிய பரிந்துரைகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும். கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு விதிக்கப்படுவதாக தகவல்கள் பரவுகின்றன. கர்நாடகத்தில் எக்காரணத்தை கொண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படாது. இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்படாத என தெரிவித்துள்ளார்.