1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 23 ஆகஸ்ட் 2020 (19:51 IST)

நடிகை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் போவதில்லை: மத்திய அரசின் வழக்கறிஞர் தகவல்

நடிகை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் போவதில்லை
ராமர் கோவில் - பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த பாலிவுட் நடிகை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் போவதில்லை என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார் 
 
சமீபத்தில் ராமர் கோயில் கட்டுவது குறித்த வழக்கின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் வழங்கியது என்பது தெரிந்ததே இந்த தீர்ப்புக்கு இந்தியாவில் உள்ள பெரும்பாலானோர் வரவேற்பு தெரிவித்துள்ளார்கள். ஒரு சிலர் மட்டும் இந்த தீர்ப்புக்கு எதிராக சில கருத்துக்களை தெரிவித்தனர் 
 
அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் என்பவர் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது ராமர் கோவில் தீர்ப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை தெரிவித்தார். இந்த கருத்தை அடுத்து அவர் மீது நீதிமன்ற வழக்கு தொடரப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது
 
ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கேகே வேணுகோபால் அவர்கள் ’நடிகையின் கருத்து கிரிமினல் குற்றம் அல்ல. எனவே அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் வேறு நடவடிக்கைகளும் எடுக்க தேவை இல்லை’என்று தெரிவித்துள்ளார்