1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (08:31 IST)

இன்று 2022-23 நிதியாண்டிற்கான பட்ஜெட்: செயலி மூலம் நேரலையில் காண ஏற்பாடு

2022 - 23 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
 
இந்தியாவின் 75ஆவது பட்ஜெட்டும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4வது பட்ஜெட்டும் ஆன இந்த பட்ஜெட்டில் சேவை மற்றும் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்புகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது 
 
மேலும் கடந்த ஆண்டு காகிதமில்லா நிதி அறிக்கையை தாக்கல் செய்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இரண்டாவது முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டை யூனியன் பட்ஜெட் என்ற செயலின் மூலம் உடனுக்குடன் நேரலையில் பொதுமக்கள் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது 
இன்னும் சில மணிநேரங்களில் பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதை அடுத்து பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது