எதிர்க்கட்சிகள் கபட நாடகம் போடுகின்றன.. அதானி விவகாரம் குறித்து நிர்மலா சீதாராமன்
அதானியை காப்பாற்ற மத்திய அரசு முயற்சி செய்வதாக எதிர்க்கட்சிகள் கபட நாடகம் போடுகின்றன என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அதானி விவகாரம் தொடர்பாக இன்று பாராளுமன்றத்தின் இரு அவைகள் முடங்கிய நிலையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்தார். அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு கபட நாடகம் போடுகின்றன என்றும் ஒரு பக்கம் போராட்டம் நடத்தும் எதிர்க்கட்சிகள், அவர்கள் ஆளும் மாநிலங்களில் அதானி நிறுவனத்திற்கு துறைமுகம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்ற நிலம் வழங்கி வருகின்றன என்றும் தெரிவித்தார்.
எதுவாக இருந்தாலும் ஆக்கபூர்வமாக விவாதம் நடத்தலாம், நாடாளுமன்றத்திற்கு வாருங்கள் என்று கூறியும் அவர்கள் அவைக்கு வர மறுக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்
பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இருப்பது சகஜம்தான் என்றும் நாட்டின் பொருளாதாரக் கொள்கை வலுவாக இருப்பதால் பங்குச்சந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
Edited by Siva