செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 15 பிப்ரவரி 2018 (12:20 IST)

11 ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ்மோடி நாட்டை விட்டு தப்பி ஓட்டமா?

குஜராத்தை சேர்ந்த வைர நகை வியாபாரியான நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் இருந்து சுமார் 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக வங்கி சார்பில் சி.பி.ஐ.யிடம் நேற்று இரண்டு புகார்கள் அளிக்கப்பட்டது. இந்த புகார் குறித்த விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் நீரவ் மோடி நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ரூ.11 ஆயிரம் கோடி மோசடி குறித்து இன்று காலை முதல் நீரவ் மோடிக்கு சொந்தமான 28 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் முடிவில் நீரவ் மோடியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்வார்கள் என்ற வதந்தியும் பரவி வந்தது.

இந்த நிலையில் நீரவ் மோடி நாட்டை விட்டு தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஏற்கனவே ரூ.9000 கோடி பல்வேறு வங்கிகளில் கடன்பெற்ற விஜய்மல்லையா நாட்டை விட்டு தப்பியோடிவிட்ட நிலையில் தற்போது நீரவ் மோடியும் தப்பியுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.