புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: திங்கள், 22 ஜூன் 2020 (16:28 IST)

அடுத்தடுத்து நிலநடுக்கம்… பதறிய மக்கள்…அரசாங்கம் உதவி!

மிசோரம் மாநிலத்தில் கடந்த 12 மணிநேரத்தில் 2 முறை  நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு பல வீடுகள், கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன.

மிசோரம் மாநிலத்தில் நேற்று மாலை தலைநகர் ஐசாவில் இருந்து 25 கிமீ தொலைவில் உள்ள 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று அதிகாலை 4.10 மணிக்கு  சம்பாய் நகரில் 5.5. ரிக்டர் அளவில் நிலடுக்கம் ஏற்பட்டது.

இதில் வீடுகள் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.  நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலநடுக்கம் குறித்து மிசோரம் மாநில முதல்வர் சோரம்தங்காவை தொடர்பு கொண்ட  பேசிய பிரதமர் மோடி நிலைமையை ஆராய்ந்து மத்திய அரசு தேவையான உதவிகள் செய்ய்யும் என தெரிவித்துள்ளார். மேலும் மிசோரம் மக்களுக்காக பிரார்த்திப்பதாக உள்துறை மந்திரிஅமித் ஷா பதிவிட்டுள்ளார்.