செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 21 மே 2021 (07:32 IST)

புதிய இணையதளத்தை அறிவித்தது வருமான வரித்துறை: ஜூன் 7 முதல் செயல்படும் என அறிவிப்பு!

வருமான வரி கட்டுபவர்கள் வருமான வரி தாக்கல் செய்ய புதிய இணையதளத்தை வருமான வரித்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது. இந்த புதிய இணையதளம் ஜூன் மாதம் 7ஆம் தேதி முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் வருமான வரி தாக்கல் செய்ய தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் என்ற இணையதளம் ஜூன் 1 முதல் 6ம் தேதி வரை மூடப்படும் என்றும் அந்த ஆறு நாட்களிலும் அந்த இணையதளத்தை வரி செலுத்துபவர்கள் மற்றும் வரித் துறை ஊழியர்கள் பயன்படுத்த முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
புதிய இணையதளத்திற்கு பழகிக்கொள்ள வரி செலுத்துவோருக்கு கால அவகாசம் அளிக்கப்படும் என்றும் வருமான வரி துறையின் புதிய இணையதளம் குறித்த புகார்கள் பத்தாம் தேதியில் இருந்து விசாரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
வருமான வரித்துறை அறிவித்துள்ள புதிய இணையதளத்தின் முகவரியை இதுதான் www.incometaxgov.in ஜூன் 7ஆம் தேதி முதல் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் இந்த இணையதளத்தின் மூலம் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துகொள்ளலாம் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.