வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 26 டிசம்பர் 2018 (21:48 IST)

ஜனவரி 1 முதல் புதிய ஐகோர்ட்: குடியரசு தலைவர் அறிவிப்பு

இந்தியாவில் இதுவரை 24 ஐகோர்ட்டுகள் செயல்பட்டு வரும் நிலையில் 25வது ஐகோர்ட்டாக ஆந்திர மாநிலத்தில் வரும் ஜனவரி 1 முதல் செயல்படும் என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசமாக இருந்த ஆந்திர மாநிலம், தெலுங்கனா, ஆந்திரா என இரண்டாக பிரிக்கப்பட்ட பின்னர் ஆந்திராவுக்கு என தனியாக ஐகோர்ட் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் அமராவதியில் புதிய ஐகோர்ட் செயல்பட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். வரும் ஜனவரி 1 முதல் செயல்படவிருக்கும் இந்த ஐகோர்ட் நாட்டின் 25-வது ஐகோர்ட் என்பது குறிப்பிடத்தக்கது.