ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 21 ஜூலை 2024 (07:53 IST)

2 கட்டமாக நடத்தப்படுகிறதா நீட் தேர்வு? மத்திய அரசு பரிசீலனை: அடுத்த கல்வியாண்டு முதல் அமல்..?

நீட் தேர்வு தற்போது ஒரே கட்டமாக நாடு முழுவதும் நடந்து வரும் நிலையில் இரண்டு கட்டமாக இந்த தேர்வை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அடுத்த ஆண்டு முதல் இது அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இளநிலை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையில் இந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் ஏற்பட்டுள்ளதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் இதுகுறித்த வழக்கும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் நீட் தேர்வை முதல் நிலை தேர்வும் இறுதி தேர்வு என இரண்டு கட்டமாக நடத்தலாமா என ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் முதல் நிலை தேர்வில் எழுத்து தேர்வும், இரண்டாம் நிலை தேர்வில் கணினி அடிப்படையில் தேர்வும் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதல் நிலை தேர்வு தேசிய தேர்வு வாரியம் மூலமாகவும் இரண்டாம் நிலை தேர்வு இடைநிலை கல்வி வாரியம் மூலமாகவும் நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை இறுதி செய்யப்பட்டால் அடுத்த கல்வி ஆண்டு முதல் நீட் தேர்வு இரண்டு கட்டமாக நடைபெறும் என்று கூறப்படுகிறது.

Edited by Siva