ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 20 ஜூலை 2024 (14:20 IST)

தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு.!

NEET
உச்சநீதிமன்ற உத்தரவின் படி,  நீட் இளநிலை மருத்துவத் தேர்வுக்கான முடிவுகளை நகரம் மற்றும் தேர்வு மையம் வாரியாக தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டது. 
 
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் பொது தேர்வு, கடந்த மே 5ம் தேதி நடைபெற்றது. ஜூன் நான்காம் தேதி முடிவுகள் வெளியான நிலையில், இதுவரை இல்லாத அளவாக 67 பேர், 720க்கு 720 மதிப்பெண் பெற்றனர். தேர்வு தாள் கசிவு, தேர்வுகளை நடத்துவதில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் எழுந்தன.
 
இதை எடுத்து நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தக் கோரியும், மோசடிகள் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு,   மாணவர்கள் ஒவ்வொருவரும் தன் மதிப்பெண் என்ன என்பதை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.

மற்றவர்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றனர்? எந்த தேர்வு மையங்களில் அல்லது நகரங்களில் அதிகமானோர் அதிக மதிப்பெண் பெற்றனர் என்பது தெரியாது. இதனால், மதிப்பெண் பட்டியல் அடங்கிய முழு ரிசல்டை, இன்று (ஜூலை 20) மதியம் 12:00 மணிக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது.

 
அதன்படி, இன்று தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. https://exams.nta.ac.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக நீட் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.