ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 19 ஜூலை 2024 (17:51 IST)

வங்கதேசத்தில் சிக்கியுள்ள 106 தமிழக மாணவர்கள்.. விமானம் கிடைக்காமல் தவிப்பு..!

வங்கதேசத்தில் 106 தமிழக மாணவர்கள் விமானம் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருப்பதாகவும் அவர்களை மீட்க உடனடியாக மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

வங்கதேச நாட்டில் தற்போது மாணவர்கள் போராட்டம் நடப்பதால் பெரும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ள நிலையில் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வங்கதேச கலவரம் காரணமாக வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திருப்பி கொண்டிருக்கும் நிலையில், 106 தமிழக மாணவர்கள் டாக்கா விமான நிலையத்தில் சிக்கி இருப்பதாகவும் மைக்ரோசாப்ட் குளறுபடி காரணமாக விமானம் கிளம்பாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு காரணமாக போராட்டம் காரணமாக கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம் உள்பட இந்திய மாணவர்கள் நாடு திரும்ப முடிவு செய்திருக்கும் நிலையில் சிலேட் என்ற நகரில் படிக்கும் 106 தமிழகம் மாணவர்கள் சென்னை திரும்ப திட்டமிட்டனர்.

ஆனால் மைக்ரோசாப்ட் குளறுபடி காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதை அடுத்து விமான நிலையத்திலேயே 106 மாணவர்கள் இருப்பதாக தெரிகிறது. இதில் 56 மாணவர்கள் டாக்காவிலிருந்து நேரடியாக சென்னைக்கும், 50 மாணவர்கள் கொல்கத்தா வழியாக சென்னைக்கும் வர முடிவு செய்த நிலையில் அவர்கள் விமான நிலையத்தில் தற்போது இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வங்கதேச விமான நிலையத்தில் சிக்கியிருக்கும் 106 தமிழக மாணவர்களை உடனடியாக மிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.

Edited by Mahendran