திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 16 மார்ச் 2022 (09:31 IST)

ஆரம்பத்திலேயே 1000 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக நேற்று என 700 புள்ளிகளுக்கு மேல் மீண்டும் சரிந்ததால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்றைய பங்குச் சந்தையில் ஆரம்பத்திலேயே சுமார் 1000 புள்ளிகள் வரை சென்செக்ஸ் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மீண்டும் நம்பிக்கை அளித்துள்ளது 
 
சற்றுமுன் மும்பை பங்கு சந்தை 950 புள்ளிகள் உயர்ந்து 56,740  என்ற நிலையிலும் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 660 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 16975 என்ற நிலையிலும் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
பங்குச்சந்தை மீண்டும் சுமார் 1000 புள்ளிகள் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது