மயிலாடுதுறையில் கந்துவட்டி வசூலித்த தாய்,மகன் சிறையிலடைப்பு!
மயிலாடுதுறையில் அப்பாவி மக்களிடம் கந்து வட்டி வசூல் செய்த தாய் மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்
மயிலாடுதுறையில் உள்ள சீர்காழியில் வாசுதேவன் என்பவரிடம் கந்து வட்டி வசூலித்தால் தாய் மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்
வழுதலைக்குடி என்ற பகுதியைச் சேர்ந்த சோலையம்மாள் மற்றும் அவரது மகன் ஜெகவீரபாண்டியன் ஆகிய இருவரிடம் இருந்து கையெழுத்து மட்டுமே இருந்த 11 பத்திரங்கள், 25 அடமான பாத்திரங்கள், 8 உத்திரவாத பத்திரங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்
இதனையடுத்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். கந்து வட்டி வசூலித்தால் தாய் மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது