1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 3 ஜூன் 2021 (10:03 IST)

கொரோனா பரப்புவதற்காக வேண்டுமென்றே மருமகளை கட்டிப்பிடித்த மாமியார்!

மருமகளுக்கு கொரோனா பரப்ப முயற்சித்த மாமியார்!
 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. இருந்தாலும் மக்கள் தொடர்ந்து பாதுகாப்புடனும் விழிப்புணருடனும் இருக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகிறது. 
 
இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் மருமகளை பழிவாங்க கொரோனா வைரஸை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தியிருக்கிறார் ஒரு வில்லி மாமியார், மாமியார் - மருமகள் இடையிலான சண்டை, சச்சரவுகளை மனதில் வைத்து கொரோனா பாதிக்கப்பட்ட மாமியார் தனது மருமகளுக்கு கொரோனாவை பரப்புவதற்காக வேண்டுமென்றே அவரை கட்டிப்பிடித்து பழி தீர்த்தியுள்ளார்.