வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (15:42 IST)

மகனை இறுகப் பற்றியபடி உயிரிழந்த தாய்: பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

கேரளாவில், நிலச்சரிவில் தனது ஒன்னரை வயது மகனை இறுகப்பற்றிக் கொண்டு தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலத்தின் பல பகுதிகளில் சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மேலும் வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் 70 க்கும் மேலானவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் மலப்புரம் பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், மகனை இறுகப் பற்றியபடி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தாயை பார்த்து அதிர்ந்து போயுள்ளனர்.

மலப்புரம் பகுதியில் வசித்து வந்தவர் கீதா. இவருக்கு துருவன் எனும் ஒன்னரை வயது ஆண் குழந்தை உள்ளது. கீதாவின் கணவர் ஷரத் தன்னுடைய தாயாருடன் தனது வீட்டின் அருகில் நடந்து வந்தபோது நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அந்த நிலச்சரிவில் ஷரத் உயிர் தப்பினார். ஆனால் அவரது தாயார் நிலச்சரிவில் சிக்கி இறந்து போனார். மேலும் அந்த நிலச்சரிவில் வீட்டிற்குள் இருந்த கீதா, தனது மகனை இறுகப்பற்றிக்கொண்டு அணைத்தப்படி உயிரிழந்தார். நிலச்சரிவில் சிக்கிய தாய் மற்றும் மகனின், சடலத்தை மீட்பு குழுவினர் மீட்டனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.