திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 12 ஏப்ரல் 2023 (10:32 IST)

7000ஐ கடந்தது இந்திய அளவிலான தினசரி கொரோனா.. கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?

Virus
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்திய அளவிலான தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு 1500 முதல் 2000 வரை இருந்த நிலையில் தற்போது 7000ஐ கடந்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
 
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7830 என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருவதை அடுத்து கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
 
 கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 7,830 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் கோவிட் தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,47,76,002 என்றும், நாடு முழுவதும் கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 40,215 என்றும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 
 
கடந்த 24 மணி நேரத்தில் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 4,692 என்றும், நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 16 பேர் உயிரிழந்தனர் என்றும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 
 
Edited by Mahendran