திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 24 மார்ச் 2020 (08:39 IST)

ரூபாய் நோட்டு அடிக்கும் பணி நிறுத்தம் – அச்சகங்களை மூடிய அரசு !

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள நாசிக்கில் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

கொரொனா வைரஸ் உலக அளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 192 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. பல நாடுகளில் லாக் அவுட் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. இதுவரை 15000 பேருக்கு மேல் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 470 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் பல மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள நாசிக்கில் நடைபெற்று வந்த ரூபாய் நோட்டு அச்சடிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

அங்குள்ள ந்திய பாதுகாப்பு அச்சகம், கரன்சி நோட்டு அச்சகம் ஆகிய இரண்டு அச்சகங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த அச்சகங்கள் 31-ந்தேதி வரை மூடப்படவுள்ளது. தீயணைப்பு வீரர்கள், பாதுகாப்பு ஊழியர்கள், அத்தியாவசிய பணி செய்பவர்கள் மட்டுமே அங்கு இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.