வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 24 மார்ச் 2020 (08:36 IST)

30 மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு: முடங்கியது இந்தியா!

கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமடைந்து வரும் நிலையில் ஏறத்தாழ அனைத்து மாநிலங்களும் முடக்கப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பல லட்சம் மக்கள் உலகம் முழுவதும் பாதித்துள்ள நிலையில் இந்தியாவிலும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

நிலைமையை கருத்தில் கொண்டு இந்தியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்கள் ஊரடங்கு அமலானது. அதற்கு முன்பே பல மாநிலங்கள் 144 தடை உத்தரவை செயல்படுத்தியிருந்த நிலையில், மக்கள் ஊரடங்கை தொடர்ந்து டெல்லி, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் அதை 144 தடையாக நீட்டித்துள்ளன.

தமிழகத்திலும் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமலாகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மாநிலங்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. மிசோரம், சிக்கிம் தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு அமலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.