திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 17 செப்டம்பர் 2018 (16:45 IST)

பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரித்த பிரதமர் மோடி

தன் இடைவிடாத முயற்சியாலும், திறமையாலும்  இன்று உலகம் வியக்கும் உயர்ந்த பதவியை பிடித்துள்ளார் பிரதமர் நரேந்தர மோடி. பூகம்பத்தால் பாதிக்கப்பட்டிருந்த குஜராத் மாநிலத்தை, தான்  முதல்வராக பதவி ஏற்றதும் தனது ஆட்சியில் மூலம் இந்தியாவில் முன்னனி மாநிலத்துக்கு கொண்டு வந்தவர் என்ற பெருமையும் அவரையே சேரும்.

பாரத நாட்டின் 14 வது பிரதமராக கடந்த 2014ம் ஆண்டில் பதவி ஏற்றுக் கொண்ட மோடி பா.ஜா.க கட்சியின் அடிப்படையிலிருந்து வந்தவர். அவரது இடைவிடாத முயற்சியாலும், திறமையாலும்  இன்று உலகம் வியக்கும் உயர்ந்த பதவியை பிடித்துள்ளார். 

இன்று அவரது 68 வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு டிவிட்டரில் பலரும் வாழ்த்துக்கள் கூறிய வண்ணம் உள்ளனர். இந்நிலையில் தனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் தன் டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.