புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: ஞாயிறு, 12 ஜனவரி 2020 (11:57 IST)

”யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது” மோடி உறுதி

குடியுரிமை திருத்த சட்டம் மூலம் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது என பிரதமர் மோடி உறுயளித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எதிர்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, தமிழகத்தில் முக ஸ்டாலின், கேரளத்தில் பினராயி விஜயன் உட்பட நாடு முழுவதும் பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தும் பேரணி நடத்தியும் வருகின்றனர்.

இந்நிலையில் ”குடியுரிமை திருத்த சட்டம் மூலம் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது என்பதை மீண்டும் சொல்கிறேன், குடியுரிமை சட்டம் தொடர்பாக நாட்டு மக்களை திசை திருப்புகிறார்கள், அரசியல் விளையாட்டை விளையாடுகிறவர்கள் குடியுரிமை சட்டம் குறித்து புரிந்துக்கொள்ள மறுக்கின்றனர்” என மேற்கு வங்க மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி கூறியுள்ளார்.