செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 5 ஆகஸ்ட் 2020 (16:30 IST)

நேபாள ராமர்: ஒப்புக்கொள்கிறாரா மோடி?

நேபாளத்திற்கும் ராமருக்கும் தொடர்பு உள்ளது என ராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பேச்சு. 
 
ராமர் இந்திய கடவுள் இல்லை என்றும் அவர் நேபாள கடவுள் என்றும் நேபாளத்தில் தான் உண்மையான அயோத்தி இருப்பதாகவும் இந்தியாவில் உள்ளது உண்மையான அயோத்தி இல்லை என்றும் நேபாள பிரதமர் ஷர்மா ஒலி பேசி கடந்த மாதம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அயோத்தியில் அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடந்து முடிந்தது. 
 
இது குறித்து பிரதமர் மோடி, பல காலமாக நடந்த போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் அமைவதால் மொத்த அயோத்தியுமே சுதந்திரம் பெற்றுள்ளது. இந்த இடத்தில் ராமர் கோவில் அமைவதற்காக நடைபெற்ற போராட்டமானது சுதந்திர போராட்டத்திற்கு நிகராக உள்ளது. 
 
இதற்காக உயிர்தியாகம் செய்த அத்தனை பேருக்காகவும் 130 கோடி மக்களின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும், நேபாளத்திற்கும் ராமருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொடர்பு உள்ளது என ராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பேசினார்.