வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (13:53 IST)

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று முக்கிய உரையாற்றுகிறார்..

பிரதமர் மோடி இன்று வானொலியில் “மன் கி பாத்” நிகழ்ச்சி மூலம் இன்று மாலை 4 மணிக்கு வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

மத்தியில் ஆட்சியில் இருக்கும் மோடி தலைமையிலான பாஜக அரசு, இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல அதிரடி சட்டங்களை இயற்றிவுள்ளது. முக்கியமாக முத்தலாக் தடை மசோதா, என்ஐஏ சோதனை, ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து தடை ஆகிய சட்டங்களுக்கு பெரும் எதிர்ப்புகள் கிளம்பின.

இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு, வானொலியில் “மன் கி பாத்” நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்தும், லடாக்-காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது குறித்தும் பிரதமர் மோடி விளக்கம் அளிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.