திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 29 நவம்பர் 2016 (14:30 IST)

கட்சி எம்பி மற்றும் எம்எல்ஏக்களையும் விட்டுவைக்காமல் மோடி அதிரடி!!

வங்கிகளில் பணம் டெபாசிட் செய்த விவரங்களை அளிக்குமாறு பாஜக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு பிரதமர் மோடி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.


 
 
கடந்த 8ஆம் தேதி முதல் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டது.
 
தொடர்ந்து பிரதமர் மோடி குறித்து எதிர்கட்சிகள் பாஜக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பணத்தை பாதுகாத்துவிட்டதாக விமர்சித்து வந்தனர்.
 
இந்நிலையில் பிரதமர் மோடி அனைத்து பாஜக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் (அமைச்சர்கள் உட்பட) அனைவரும் வங்கி கணக்குகளை ஒப்படைக்க அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
இதனையடுத்து, பாஜக எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் நவம்பர் 8 ஆம் தேதியிலிருந்து, தற்போது வரையிலான வங்கி பண பரிவர்த்தனையை சமர்ப்பிக்க பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
 
இந்த வங்கி கணக்குகளை பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிடம் சமர்ப்பிக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.