வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 29 ஏப்ரல் 2017 (12:07 IST)

தேசிய விருது இயக்குனர்: கொலை முயற்சி; மாடல் அழகிக்கு 3 ஆண்டு சிறை!!

மும்பையைச் சேர்ந்த பிரபல பட அதிபர் மற்றும் இயக்குனர் மதூர் பண்டார்கர். இவர் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை இரண்டு முறை பெற்றவர். 


 
 
2005 ஆம் ஆண்டு கூலிப்படை மூலம் தன்னை பிரபல மாடல் அழகி பிரீத்தி ஜெயின் கொலை செய்ய முயன்றதாக மும்பை போலீசில் புகார் செய்தார். 
 
பிரீத்தி ஜெயின் 2005 ஆம் ஆண்டு மும்பை பிரபல தாதா அருண் காவ்லியின் உதவியாளர் நரேஷ் பர்தேசி மூலம் மதூர் பண்டார்கரை கொல்வதற்கு ரூ.75 ஆயிரம் பணம் கொடுத்து உள்ளார். 
 
நீண்ட விசாரணைக்கு பிறகு பிரீத்தி ஜெயின், பட அதிபர் மதூர் பண்டார்கரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதை போலீசார் உறுதி செய்தனர். இதனையடுத்து அவருக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.