மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் சேவை ரத்து; மத்திய அரசு அதிரடி
2018 பிப்ரவரி மாதத்திற்குள் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் செல்போன் சேவை ரத்து செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய, மாநில அரசு நல திட்டங்கள் பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் வழங்கப்படும் அனைத்து சேவைகளும் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. வங்கி, பான் ஆகியவையுடன் ஆதார் எண் இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதற்கான கால கெடுவை அறிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் இணைக்காவிட்டால் மொலை சேவை ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் ஆதார் கட்டாயமில்லை என கூறி வந்தாலும் மத்திய அரசு தொடர்ந்து ஆதார் எண்ணை அனைத்து சேவைகளும் கட்டாயமாக்கி வருகிறது.