செவ்வாய், 4 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 4 மார்ச் 2025 (15:18 IST)

சட்டப்பேரவையில் பான்மசாலா போட்டு துப்பிய எம்.எல்.ஏ.. சபாநாயகர் எச்சரிக்கை..!

உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத்தில், பான் மசாலா போட்டு எச்சில் துப்பிய எம்எல்ஏவை சபாநாயகர் கண்டித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தற்போது, உத்தரப்பிரதேச மாநில சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 20ஆம் தேதி, நிதி அமைச்சர் சுரேஷ்குமார் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதையடுத்து, பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில், சட்டப்பேரவையில் பான் மசாலா சாப்பிட்ட ஒரு எம்எல்ஏ அங்கிருந்தே எச்சில் துப்பிய சம்பவம் சபாநாயகர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவ இடத்தை பார்வையிட்ட அவர், இன்றைய கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக இதுபற்றி பேசினார்.
 
"சட்டப்பேரவையில் எச்சில் துப்புவது மிக மோசமான செயல். சிசிடிவி வீடியோ மூலம் அந்த உறுப்பினரை கண்டுபிடித்து தனிப்பட்ட முறையில் அழைத்து தண்டனை வழங்குவேன். இதுபோன்ற செயல்களில் வேறு யாரேனும் ஈடுபடினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," என்று அவர் எச்சரித்தார்.
 
மேலும், சம்பந்தப்பட்ட உறுப்பினர் நேரில் வந்து தவறை ஒப்புக்கொண்டால் நல்லது. இல்லையெனில், நான் அவரை நேரடியாக அழைத்து கண்டிப்பதாகவும்," சபாநாயகர் கூறியதனால், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran