கரையை கடந்தது ‘மிதிலி’ புயல்.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!
வங்க கடலில் தோன்றிய மிதிலி புயல் வங்கதேசத்தில் கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னாள் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தோன்றியது. இது படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாறியதை அடுத்து இந்த புயலுக்கு மிதிலி என்று பெயர் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் மிதிலி புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்கதேசத்தில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருப்பது.
அது போலவே வங்கக் கடலில் நிலவி வந்த மிதிலி புயல் நேற்று இரவு வங்கதேசம் அருகே கரையை கடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து திரிபுரா, வங்கதேசம் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து மிதிலி புயல் கரையை கடந்ததாகவும் இந்த புயலால் பெரிய அளவில் சேதம் எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
Edited by Mahendran