செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

முன்னாள் சோவியத் யூனியன் தலைவர் மிக்கைல் கோர்பசேவ் காலமானார்: உலக தலைவர்கள் இரங்கல்!

korpachev
முன்னாள் சோவியத் யூனியன் தலைவர் மிக்கைல் கோர்பசேவ் காலமானார்: உலக தலைவர்கள் இரங்கல்!
முன்னாள் சோவியத் யூனியன் தலைவர் மிக்கைல் கோர்பசெவ் காலமானார் என்ற தகவலை அந்நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு வயது 91.
 
கடந்த 1985ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை சோவியத் யூனியன் தலைவராக இருந்தார் என்பதும் சோவியத் யூனியன் கலைக்கப்பட்டது அவரது ஆட்சியில்தான் என்பதும் சோவியத் யூனியன் துண்டுதுண்டாக பிரிந்து கலைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
மிக்கைல் ஆட்சியின்போது தான் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து பல்வேறு நாடுகள் குடியரசு ஆகியது. சோவியத் யூனியன் பொருளாதாரம் பணவீக்கம் மற்றும் விநியோக பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் மிக்கைல்  மறுசீரமைப்பு திட்டத்தை அமல்படுத்தினார். 
 
மேலும் மிக்கைல் ஆட்சிக் காலத்தில் பத்திரிகை மற்றும் கலாச்சாரத்திற்கு சுதந்திரம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது . 1990 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மிக்கைல் வயது முதுமை காரணமாக மரணம் அடைந்துள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன மற்ற பள்ளி