Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இந்திய தேர்தலை சீர்குலைக்க சீனா சதியா? மைக்ரோசாப்ட் எச்சரிக்கை

Written By Mahendran
Updated: சனி, 6 ஏப்ரல் 2024 (11:20 IST)
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவில் நடைபெறும் தேர்தலை சீர்குலைக்க சீனா சதி செய்து வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா மற்றும் சீனா இடையே பல ஆண்டுகால பகை இருந்து வரும் நிலையில் அருணாச்சல பிரதேச மாநிலத்தை தங்களுக்கு சொந்தம் என்று சீனா கூறி வருவது மேலும் பகைமையை வளர்த்து வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் ஏப்ரல் 19 முதல் ஜூன் ஒன்று வரை ஏழு கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தல் முடிவை இந்தியா மட்டுமின்றி உலகில் உள்ள பல நாடுகள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியாவில் உள்ள தேர்தலை சீர்குலைக்க சீனா திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இந்திய தேர்தலை சீர்குலைக்க சதி செய்து வருவதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த எச்சரிக்கையை அடுத்து மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் தேர்தலுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் என்றும் தொழில்நுட்ப அளவில் எந்த பிரச்சனையும் வராமல் இருக்க ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Edited by Mahendran

எல்லாம் காட்டு

அமெரிக்கா வரி போட்டா நாங்களும் வரி போடுவோம்!.. கனடா பிரதமர் அதிரடி!...

நாங்களா? அவங்களா?.. முடிவு பண்ணுங்க!.. முதல்வருக்கு சி.பி.எம் சண்முகம் கேள்வி!..

சட்டசபையை ஷூட்டிங் ஸ்பாட்டாக நினைக்கிறார் விஜய்!.. ஸ்டாலின் தாக்கு!...

மாமா.. மச்சான்!. நல்லவேளையா நானும், ஸ்டாலினும் அங்க இல்ல.. துரைமுருகன் புலம்பல்...

சபாநாயகர் ஜேடிசி பிரபாகர் சூப்பர்.. பாராட்டிய முக ஸ்டாலின்!.. நடந்தது என்ன?...

அடுத்த கட்டுரையில்
Show comments