விழுந்து நொறுங்கியது மிக்-21 போர் விமானம்..
மத்திய பிரதேசத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் 21 ரக போர் விமானம், கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியரில் போர் விமானமான மிக்-21 விமானத்தில் விமானிகள் இன்று பயிற்சியில் ஈடுபட்டனர். குவாலியர் விமான தளத்தில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் சிறிது நேரத்தில் திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்தது.
கட்டுப்பாட்டை இழந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. அதிலிருந்த விமானிகள் இருவரும், வெளியேறி பாராசூட் உதவியுடன் கீழே குதித்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து விமானப்படை அதிகாரிகள்ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் இதுவரை 2016 ஆம் ஆண்டிலிருந்து 15 போர் விமானங்கள் இது போல் விபத்துக்குள்ளாகியுளதாக வெளியான தகவல் குறிப்பிடத்தக்கது.