வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 27 ஜூன் 2019 (17:23 IST)

பாஜகவில் இணைகிறாரா ’நம்ம மெகா ஸ்டார் ’? ரசிகர்கள் ஆர்வம் !

தமிழ் சினிமாவில் ரஜினியைப் போல தெலுங்கு சினிமாவில் மெகா ஸ்டாராக இருப்பவர் சிரஞ்சீவி. இவர் நடித்து வெளிவரும் படங்களை அவரது ரசிகர்கள்  திருவிழா மாதிரி கொண்டாடுவார்கள். அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. 
சில வருடங்களுக்கு முன்பி பிரஜா ராஜ்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. ஆனால் போதிய அளவு அக்கட்சிக்கு ஆதரவு கிடைக்காததால்... காங்கிரஸுடன் தன் கட்சியை இணைத்தார். எம்பியாகவும் இருந்தநிலையில் கடந்த ஏப்ரலில் அவரது பதவிக்காலம் முடிவடைந்தது. 
 
இந்நிலையில் தற்பொது 'சைரா நரசிம்மரெட்டி' என்ற பிரமாண்டமான வரலாற்று  படத்தில் நடித்து வருகிறார். அதேசமயம் அவரை பாஜக பக்கம் இணைக்க கட்சியின் முக்கிய தலைவர்கள் முயன்றுவருகிறார்கள்.
 
சமீபத்தில் நடந்து முடிந்த  மக்களவைத்தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி பலத்த தோல்வியைச் சந்தித்தது. ஆனால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று, அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி   முதல்வராகப்  பதவியேற்றார்.
இதனைத் தொடர்ந்து, ஆந்திராவில் பாஜவை வளர்த்தெடுக்க அக்கட்சியின் மேலிடம் முயல்கின்ற வேளையில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் பேச்சு வார்த்தைகள் நடத்திக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.
 
இதனால் சிரஞ்சீவியின் ரசிகர்கள் தங்கள் மெகாஸ்டார் என்னமுடிவெடுப்ப்பார் என்பதைக் காண ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.