செவ்வாய், 4 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 3 மார்ச் 2025 (11:56 IST)

இறையாண்மைக்கு பதிலாக வகுப்புவாதம் என கூறி பதவியேற்ற மேயர்.. காங்கிரஸ் கிண்டல்..!

மேயர் பதவி ஏற்பு விழாவில் "இறையாண்மை" என்று கூறுவதற்கு பதிலாக "வகுப்பு வாதம்" எனக் கூறிய பெண் ஒருவரால் சத்தீஸ்கர் மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் நடந்த மாநகராட்சி தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில், பாஜகவில் சேர்ந்த பூஜா என்பவர் மேயராக தேர்வு செய்யப்பட்டார். நேற்று பொதுமக்கள் முன்னிலையில் அவரது பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
 
அப்போது, "இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு உண்மையாக நடந்து கொள்வேன், இந்திய ஒருமைப்பாட்டையும் வகுப்பு வாதத்தையும் நிலை நாட்டுவேன்" என அவர் வாய் தவறி கூறியுள்ளார். "இறையாண்மையை நிலை நாட்டுவேன்" என்று கூறுவதற்கு பதிலாக "வகுப்பு வாதம்" என கூறியதை அடுத்து, மேடையில் இருந்தவர்கள் உடனடியாக அதை கவனித்து திருத்தினர். இரண்டாவது முறையாக அவர் சரியாக கூறி பதவி ஏற்றார்.
 
இது குறித்து காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. "இது பாஜகவின் நாடகம், வாய்தவறி உளறி இருக்க வாய்ப்பே இல்லை. வேண்டுமென்றே அந்த பெண் 'வகுப்பு வாதம்' என்று கூறி பதவி ஏற்றுள்ளார்" என காங்கிரஸ் கட்சியினர் கூறி வருவது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva