1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (20:39 IST)

பாஜகவின் ‘பி டீம்’தான் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி: காங்கிரஸ் எம்.பி பேட்டி

பாஜகவின் ‘பி டீம்’ தான் மாயாவதியின் கட்சி என காங்கிரஸ் எம்பி டேனிஷ் அலி திடீரென புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்த டேனிஷ் அலி  என்பவர் அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து  தேர்தலில் போட்டியிடுகிறார் 
 
இந்த நிலையில் சமீபத்தில் அவர் பேட்டி அளித்த போது பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தனது கொள்கையிலிருந்து விலகிப் போயிட்டு விட்டார் என்றும் எந்த நோக்கத்திற்காக கட்சி தொடங்கப்பட்டதோ அதிலிருந்து அவர் விலகி சென்று விட்டார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார் 
 
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் என்றும் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி இருக்கும் பகுஜன் சமாதி கட்சி வேட்பாளர்களை பாஜக தான் தேர்வு செய்கிறது என்றும் இதனால் பாஜகவின் பீ டீம் தான் பகுஜன் சமாஜ் கட்சி செயல்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
 
 இந்தியா கூட்டணி இந்த முறை வெற்றி பெறவில்லை என்றால் நாட்டுக்கு மட்டுமின்றி இட ஒதுக்கீட்டுக்கும் பெரிய ஆபத்து ஏற்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
 
Edited by Mahendran