1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 5 நவம்பர் 2023 (12:46 IST)

மாவோயிஸ்ட்களால் பாஜக நிர்வாகி சுட்டுக்கொலை.. ஒரே ஆண்டில் 7 பாஜகவினர் கொலை..!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக நிர்வாகி ஒருவர் மாவோயிஸ்ட்களால் சுட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டில் மட்டும் ஏழு பாஜக நிர்வாகிகள் மாவோயிஸ்ட்களால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த பல ஆண்டுகளாக மாவோயிஸ்டுகள் அட்டகாசம் செய்து வருகின்றனர் என்பதும் அவர்களை அடக்க மாநில அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நாராயண்பூர் தொகுதி பாஜக துணை தலைவர் மாவோயிஸ்ட்களால் இன்று சுட்டு கொலை செய்யப்பட்டார். கடந்த பிப்ரவரி மாதம் பாஜக மாவட்ட துணை தலைவர் கொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு பாஜக நிர்வாகி மாவோயிஸ்ட்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டில் மட்டும் ஏழு பாஜக உறுப்பினர்கள் மாவோயிஸ்ட்களால் சுட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Siva