Daily Horoscope
✕

பிரதமர் மோடியின் முயற்சிக்கு மன்மோகன் சிங் ஆதரவு..!

Written By Mahendran
Updated: வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (17:51 IST)
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ரஷ்யா உக்ரைன் இடையே அமைதி பேச்சு வார்த்தை நடத்த பிரதமர் மோடி எடுத்து வரும் முயற்சிக்கு தனது ஆதரவு என்று கூறியுள்ளார். 
 
ரஷ்யா உக்ரைன் இடையிலான மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தி வருவதை நான் பாராட்டுகிறேன் என்றும் இந்த முயற்சியில் இந்தியா வெற்றி பெறும் என்றும், இந்திய இறையாண்மை மற்றும் பொருளாதாரம் பாதிக்காத வகையில் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார் என்றும் அவர் தெரிவித்தார். 
 
அமைதியான ஜனநாயகம், அரசியல் அமைப்பு மதிப்பு, வளர்ந்து வரும் பொருளாதாரம் ஆகியவற்றை கொண்டு இந்தியா புதிய உலகை வழி நடத்தும் என்றும்  அவர் தெரிவித்தார். இந்தியா ஒரு இணக்கமான சமுதாயமாக இருக்க வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

இந்த லின்க்கை கிளிக் பண்ணுங்க!.. வீடியோ கால் மூலம் ரூ.3,300 கோடி கொள்ளை!..

கல்லூரி விரிவுரையாளர்களுக்கு ரூ.5000 ஊதிய உயர்வு - விஜய் அறிவிப்பு...

மின் கொள்முதலுக்கு நீண்டகால ஒப்பந்தம் - தமிழக அரசு முடிவு

மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்ப கோளாறு எதிரொலி: டெல்லி விமான நிலையத்தில் பாதிப்பு...

திடீரென வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட சோனம் வாங்சுக்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments